ஏழை பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உதவிதொகை: ம.பி. முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகான் அறிவிப்பு

போபால்: மத்தியபிரதேசத்தில் ஏழை பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என மத்தியபிரதேச முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகான் தெரிவித்துள்ளார். மத்தியபிரதேசத்தில் சிவ்ராஜ்சிங் சவுகான் தலைமையிலான பாஜ ஆட்சி செய்து வருகிறது. இந்த ஆண்டு நவம்பர் மாதம் மத்தியபிரதேச தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் நர்மதாபுரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகான் நேற்று கலந்து கொண்டு பேசினார். அப்போது, “மத்தியபிரதேசத்தில்  ஏழை பெண்களுக்கு மாதம்தோறும் 1,000 ரூபாய் வழங்கும் புதிய திட்டம் தொடங்கப்படும். இதற்காக ரூ.60,000 கோடி செலவிடப்படும்” என்று கூறினார்.

Related Stories: