வளர்ப்பு மகளுக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் தந்தை கைது

அண்ணாநகர்: வளர்ப்பு மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரகுமான் (44). இவர் உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார். இவருக்கு 35 வயதில் மனைவி உள்ளார். இவர்கள் 13 வயது சிறுமியை தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர்.   நேற்று முன்தினம் இரவு போதையில்  வீட்டிற்கு வந்த அப்துல் ரகுமான், படுக்கை அறையில் தூங்கிக்கொண்டிருந்த வளர்ப்பு மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து உள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த சிறுமி, நடந்ததை அழுதவாறு தனது அம்மாவிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குபதிவு செய்து, சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அதில், ரகுமான் பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரிந்தது. இதையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் ரகுமானை போலீசார் கைது செய்து, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.

மற்றொரு சம்பவம்:  ஆவடி அருகே 35 வயது பெண்ணுக்கு, கணவர் மற்றும் 11 வயதில் ஒரு மகன் மற்றும் 4 வயதில் ஒரு மகள் உள்ளனர். இப்பெண் தினசரி தனது மகளை ஆவடி, காமராஜர் நகரில் வசித்து வரும் அக்கா சலீமா (42) வீட்டில் விட்டுவிட்டு, வேலைக்கு சென்று, பின்னர் மாலையில் வீட்டுக்கு வரும்போது அழைத்து வருவது வழக்கம். அதன்படி, அக்கா சலீமாவின் வீட்டில் வழக்கம்போல் நேற்றுமுன்தினம் மகளை விட்டுவிட்டு அப்பெண் வேலைக்கு சென்றிருக்கிறார். பின்னர் மாலை மகளை வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.

அன்றிரவு மகள் வயிறு வலிப்பதாக தனது தாயிடம் கூறியுள்ளார். இதுபற்றி விசாரித்தபோது, தனக்கு பெரியப்பா ரபீக் (எ) ராஜ்குமார் (53) பாலியல் தொல்லை கொடுத்ததால் வலிப்பதாக கூறியிருக்கிறார். இதுகுறித்து ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் அளித்தார். போலீசார் விசாரணைக்கு பிறகு போக்சோவில் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள சிறுமியின் பெரியப்பாவை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: