மாத்தூர் எம்எம்டிஏவில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி: ஏராளமானோர் பங்கேற்பு

திருவொற்றியூர்: மாத்தூர் எம்எம்டிஏவில், பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று முன்தினம் நடைப்பெற்றது. இதில், ஏராளமானோர் பங்கேற்றனர். தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, மாதவரம் ஸ்ட்ரீட் விஷன் தொண்டு நிறுவனம் சார்பில், நேற்று முன்தினம் மாத்தூர், எம்எம்டிஏ பகுதியில் பெண் குழந்தைகளை பாதுகாப்பாக வளர்ப்பது எப்படி என்பதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பேரணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தொண்டு நிறுவனத் தலைவர் சீதாதேவி தலைமை தாங்கினார்.

இதில் கவுன்சிலர் தேன்மொழி மற்றும் மணலி போலீசார் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் பெண் குழந்தைகள் பாதுகாப்புடன் வளர்ப்பது, பெண் குழந்தைகளுக்கு சமூக விரோதிகளால் ஏற்படும் பிரச்னைகள், அவற்றை சட்டரீதியாக எவ்வாறு சமாளிப்பது என பெண் குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு போலீசார் விளக்கி கூறினர். பின்னர் பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என போலீசார், பெற்றோர் உள்பட ஏராளமானோர் உறுதிமொழி ஏற்றனர்.

Related Stories: