நியூசிலாந்துடன் 2வது டி20 இந்தியா அபார பந்துவீச்சு

லக்னோ: நியூசிலாந்து அணியுடனான 2வது டி20 போட்டியில், இந்திய அணி அபாரமாகப் பந்துவீசி அசத்தியது. வாஜ்பாய் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட் செய்தது. இந்திய வீரர்களின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அணிவகுத்தனர். அந்த அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 99 ரன் மட்டுமே எடுத்தது. தொடக்க வீரர்கள் ஆலன், கான்வே தலா 11 ரன், சாப்மேன், பிரேஸ்வெல் தலா 14 ரன் எடுத்தனர்.

பிலிப்ஸ் 5, டேரில் 8, சோதி 1 ரன் எடுக்க, பெர்குசன் டக் அவுட்டானார். கேப்டன் மிட்செல் சான்ட்னர் 19 ரன், ஜேக்கப் டஃபி 6 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய பந்துவீச்சில் அர்ஷ்தீப் 2, ஹர்திக், வாஷிங்டன், சாஹல், ஹூடா, குல்தீப் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 20 ஓவரில் 100 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்தியா களமிறங்கியது. கில், கிஷன் இருவரும் துரத்தலை தொடங்கினர்.

Related Stories: