புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ராக்கி சாவந்த் தாயார் மரணம்

மும்பை: இந்தி, தெலுங்கு, மராத்தி ஆகிய மொழிகளில் நடித்து வருபவர், ராக்கி சாவந்த். தமிழில் சரத்குமார், லைலா நடித்த ‘கம்பீரம்’ என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். அவரது தாயார் ஜெயா பேதா, கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாததால், ஜூஹூவில் உள்ள கிரிட்டி கேர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூளையில் சிறிய கட்டி மற்றும் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.

தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த ெஜயா பேதா, சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். கடந்த 3 ஆண்டுகளாக ஜெயா பேதா புற்றுநோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. முன்னதாக ராக்கி சாவந்த் வௌியிட்ட வீடியோவில், தனது தாய் உடல்நலம் பெறவேண்டி ரசிகர்கள் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொண்டார். இந்நிலையில் அவரது தாயார் மரணம் அடைந்ததால், ராக்கி சாவந்துக்கு பலர் ஆறுதல் கூறினர்.

Related Stories: