முட்டை விலை மேலும் 30 காசு குறைந்தது

நாமக்கல்:  நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த 10 நாளில் முட்டை விலை 95 காசுகள் வரை குறைந்துள்ளது. இந்நிலையில், நாமக்கல் மண்டல என்இசிசி சேர்மன் டாக்டர் செல்வராஜ், நேற்று முட்டையின் பண்ணை கொள்முதல் விலையில், மேலும் 30 காசுகள் குறைத்து விலை நிர்ணயம் செய்தார்.

இதன்படி, ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 490 காசில் இருந்து 460 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் தைப்பூச திருவிழாவையொட்டி, முட்டை விற்பனை குறைந்து வருகிறது. மேலும் மற்ற மண்டலங்களில் முட்டை விலை குறைந்து வருவதால், நாமக்கல் மண்டலத்திலும் விலையை குறைக்க வேண்டியுள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

Related Stories: