எல்லாம் ஓரணியில் வாங்க...: ஜி.கே.வாசன் அழைப்பு

சேலம் நெடுஞ்சாலைநகரில் உள்ள இல்லத்தில் நேற்று மாலை 4.20 மணிக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கட்சி நிர்வாகிகளுடன் சந்தித்து பேசினார்.  இருவரும் இடைத்தேர்தல் தொடர்பாக சுமார் அரை மணி நேரம் ஆலோசனை மேற்கொண்டனர்.

ஆலோசனைக்கு பின் வெளியே வந்த ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறுகையில், ‘ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எதிரணியில் இருப்பவர்கள் எல்லாம், ஓரணியாக பிரதான எதிர்க்கட்சியோடு கூட்டணி சேர்ந்து நிற்க வேண்டும். அத்தகைய நிலை ஏற்படுமானால், மக்கள் நினைக்கும் மாற்றமானது வரும் நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் உறுதியாக ஏற்படும்’ என்று தெரிவித்தார்.

Related Stories: