வாக்காளர் பட்டியலுடன் தெரு தெருவாக அலையும் அதிமுகவினர்

அதிமுகவில் இபிஎஸ் அணியினரும், ஓபிஎஸ் அணியினரும், நாங்கள்தான் உண்மையான அதிமுக என்று  முட்டி மோதி வருகின்றனர். இரு அணியில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்று  பாஜவும் தனது முடிவை இது வரை அறிவிக்காமல் உள்ளது. இதனால் ஈரோடு கிழக்கு  தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் அறிவிப்பில் இபிஎஸ் அணியினரும், ஓபிஎஸ்  அணியினரும் முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் உள்ளனர்.

இரட்டை சிலை சின்னம் தொடர்பான வழக்கின் தீர்ப்பை இரு அணியினரும் எதிர்பார்த்து உள்ளனர். மேலும் பாஜ போட்டியிட்டால் நாங்கள் ஆதரிப்போம் என ஓபிஎஸ் அணி கூறி  வருகிறது. ஆனால், ஈபிஎஸ் அணியினர் பாஜ ஆதரவு தந்தால் ஏற்றுக்கொள்வோம். இல்லாவிட்டால் நாங்கள் தனித்தே போட்டியிடுவோம் என்ற நிலைக்கு வந்துள்ளனர்.  

இப்படி ஒரு குழப்பமான நிலை நிலவுவதால் வேட்பாளர் அறிவிப்பில் தொடர்ந்து  தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் அதிமுகவின் இரு அணியினரும் இடைத்தேர்தல்  களத்தில் என்ன செய்வது என தெரியாமல் வாக்காளர்கள் பட்டியலை கையில்  ஏந்தியபடி தெரு, தெருவாக சுற்றி வருகின்றனர்.

Related Stories: