இந்திய கம்யூ. சார்பில் 53 பேர் கொண்ட பணிக்குழு அமைப்பு

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட உள்ளார். இதனையொட்டி ஈரோட்டில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில், தேர்தல் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் 53 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டது. அந்த பணிக்குழுவின் பொறுப்பாளராக ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் பிரபாகரன் தேர்வு செய்யப்பட்டார். முன்னாள் தேசிய குழு உறுப்பினர் ஸ்டாலின் குணசேகரன், மூத்த வழக்கறிஞர் மோகன், பழங்குடி மக்கள் சங்கத்தின் மாநில தலைவர் குணசேகரன், ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளா் மோகன் உள்ளிட்டோர் இதில் இடம் பெற்றுள்ளனர்.

Related Stories: