முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் எப்போது?

ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள தேர்தல் பணிமனையில் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அமைச்சர் சு.முத்துசாமி தலைமை தாங்கினார். அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, ராமசந்திரன் ஆகியோர் பேசினர்.  

பின்னர் அமைச்சர் கே.என்.நேரு அளித்த பேட்டியில்:

பொதுக்கூட்டம் அதிகமாக இருக்காது. வீடு, வீடாக சென்று வாக்காளர்களை சந்திப்போம். மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு இருக்கிறது. பிப்.1ம் தேதி ஈரோட்டில் செயல்வீரர்கள் கூட்டம் நடக்கிறது. இதில் கூட்டணி கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பங்கேற்கிறார்கள். பிப்.3ம் தேதி ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பு மனுதாக்கல் செய்கிறார். அவர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்துக்காக அவசியம் ஈரோடு வருவார். அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.

Related Stories: