தமிழ்நாடு மின்வாரியம் சூரிய ஒளிமூலம் 4,725 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்து சாதனை: அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

சென்னை: தமிழ்நாட்டில், ஒரேநாளில் சூரிய ஒளி மூலம் 4,725.91 மெகாவாட் மின் உற்பத்தி செய்து, மின்வாரியம் புதிய சாதனை படைத்துள்ளது என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். மரபுசாரா எரிசக்தியை பயன்படுத்தி மின்உற்பத்தி செய்வதில், இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. அந்த வகையில் தமிழ் நாட்டில், சூரிய ஒளி மின் உற்பத்தி அதிகரித்து கொண்டே வருகிறது.

இதன் மூலம் காற்று மாசு ஏற்படுவது தவிர்க்கப்படும். செலவு குறைவாக சுற்றுசுழலுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லாத வகையில் உள்ளது. முக்கியமாக ஆசியாவிலேயே, தமிழ்நாட்டில்தான் காற்றாலை மூலம் அதிகம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. அதன்படி, புதிய உச்சமாக 28ம் தேதி ஒரேநாளில் சூரிய ஒளி மூலம் 4725.91 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி வெளியிட்ட டிவிட்டர் பதிவில்:

தமிழ்நாடு முதலமைச்சரின் ஆட்சியில் இதுவரை இல்லாத அளவில் சூரிய ஒளி மின் உற்பத்தி 28ம் தேதி 4725.91 மெகாவாட் அளவில் உச்சம் தொட்டு இருக்கிறது. 35 மி.யூ சூரிய ஒளி மின்சாரத்திலிருந்து நேற்று பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Related Stories: