சிறுமி பலாத்காரம்: வாலிபர் கைது

போளூர்: திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன்(24). இவர் அதே ஊரைச் சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். இதை வெளியே சொன்னால் உன் தாய், தங்கையை கொன்று விடுவேன் என முருகன் மிரட்டியுள்ளார். இதனால் சிறுமி இந்த கொடுமையை வெளியே சொல்லாமல் இருந்து விட்டார்.

இந்நிலையில், அந்த சிறுமி வாந்தி எடுப்பதை பார்த்து அவரது தாய் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றார். அங்கு நடந்த பரிசோதனையில் அந்த மாணவி கர்ப்பமாக உள்ளது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் கேட்டபோது நடந்த சம்பவத்தை சிறுமி கூறி அழுதுள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் போளூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து முருகனை போக்சோ சட்டத்தில் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.

Related Stories: