பிரபல இசைக் கலைஞரான டாம் வெர்லைன் மரணம்

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரின் மன்ஷாட்டினில் பிரபல ராக் கிதார் இசைக் கலைஞர் டாம் வெர்லைன் (73) வசித்து வந்தார். அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதால், திடீரென நேற்றிரவு காலமானார். இவரது மறைவுக்கு பாலிவுட் பிரபலங்களும், இசைக் கலைஞர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கடந்த 1970ம் ஆண்டுகளில் தனது இசைக்குழுவான ‘டெலிவிஷன்’ மூலம் ராக் கிதாரில் பெரும் புரட்சியை டாம் வெர்லைன் செய்தார். கடந்த 1977ல் தனது முதல் ஆல்பமான ‘மார்க்யூ மூன்’-ஐ வெளியிட்டார். இந்த ஆல்பத்தின் 10 நிமிட பாடல், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தொடர்ந்து கடந்த 2007 வரை நூற்றுக்கணக்கான இசை ஆல்பங்களை வெளியிட்டு, ரசிகர்களை மகிழ்வித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: