4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: உறவினருக்கு வலை

ஆவடி: ஆவடி அருகே 35 வயது பெண்ணுக்கு, கணவர் மற்றும் 11 வயதில் ஒரு மகன், 4 வயதில் ஒரு மகள் உள்ளனர். இப்பெண்ணின் மகள், தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இப்பெண்ணின் மூத்த சகோதரி சலீமா (42) ஆவடி, காமராஜர் நகரில் வசித்து வருகிறார். இவரிடம் தனது மகளை நாள்தோறும் விட்டுவிட்டு, வேலைக்கு சென்று, பின்னர் மாலையில் வீட்டுக்கு அழைத்து செல்வது வழக்கம்.

இந்நிலையில், நேற்று வழக்கம்போல் அக்கா சலீமாவின் வீட்டில் மகளை விட்டுவிட்டு அப்பெண் வேலைக்கு சென்றிருக்கிறார். பின்னர் மாலை மகளை வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார். அன்றிரவு மகள் வயிறு வலிப்பதாக கூறியிருக்கிறாள். அந்த சிறுமியிடம் விவரம் கேட்டபோது, தனக்கு பெரியப்பா ரபீக் (எ) ராஜ்குமார் (53) பாலியல் தொல்லை கொடுத்ததால் வலிப்பதாக கூறியிருக்கிறார். இதுகுறித்து ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்றிரவு சிறுமியின் தாய் புகார் அளித்தார். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான சிறுமியின் பெரியப்பாவை வலைவீசி தேடி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

Related Stories: