ஆதரவு தந்தால் ஏற்பு-தராவிட்டால் மகிழ்ச்சி என முடிவு; பாஜவை கழட்டிவிட எடப்பாடி திட்டம்? : 2ம் கட்ட தலைவர்களுக்கு புதிய உத்தரவு

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜவின் ஆதரவு தேவையில்லை என்ற முடிவுக்கு எடப்பாடி அணி வந்து விட்டது. இதனால், அவர்களை கழட்டி விட எடப்பாடி அணி திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில் பாஜவுடன் இனி எந்த பேச்சு வார்த்தையிலும் ஈடுபட வேண்டாம் என்று இரண்டாம் கட்ட தலைவர்களுக்கு எடப்பாடி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா அண்மையில் உடல்நலக்குறைவால் காலமானார். இதைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரசுக்கு அந்த தொகுதி மீண்டும் ஒதுக்கப்பட்டது. காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.ேக.எஸ்.இளங்கோவன் களம் இறக்கப்பட்டுள்ளார். அவரை ஆதரித்து திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளனர்.  அதிமுகவை பொறுத்தவரை எடப்பாடி ரொம்ப பிடிவாதமான ஆள். மேற்கு மண்டலத்தில் நாங்கள் நிற்க போகிறோம். தமாகா நின்றால் ஆளுங்கட்சி எளிதில் வெற்றி பெற்று விடும். அது மட்டுமல்லாமல் செலவும் பண்ண மாட்டார்கள். அதனால், நாங்கள் நிற்கிறோம் என்று அண்ணாமலையிடம் தனது கருத்தை எடப்பாடி தெரிவித்தார். இதனை அண்ணாமலை ஏற்று கொள்ளவில்லை. இதற்கிடையில் ஜி.கே.வாசனை நிறுத்த வேண்டும் என்று அண்ணாமலை தெரிவித்தார்.

முதலில் அண்ணாமலை வாசனை தான் தூண்டி விட்டார்.  நீங்கள் நில்லுங்கள் நாங்கள் ஆதரவு தருகிறோம் என்று அண்ணாமலை தெரிவித்தார். வாசன் போய் எடப்பாடியிடம் சீட் கேட்கிறார். அதற்கு எடப்பாடி நாங்கள் நிற்க போகிறோம். நீங்கள் நின்றால் தோல்வியை தான் சந்திக்க வேண்டும். டெபாசிட் போய் விடும். எங்கள் ஆட்களும் ஒழுங்காக வேலை பார்க்க மாட்டார்கள். நாங்கள் நின்றால் ஒழுங்காக வேலை பார்ப்பார்கள். செலவு பண்ணுவார்கள்.

அதனால், நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்று எடப்பாடி கூறிவிட்டார். இதற்கு வாசனும் விட்டு கொடுத்து விட்டார். அண்ணாமலைக்கு இது பெரிய ஷாக்கை ஏற்படுத்தியது. அதிமுக நிற்க கூடாது என்று பார்த்தோம். அதே நேரத்தில் பாஜவை நிறுத்தலாமா என்று மேலிடத்திடம் கேட்கிறார். பாஜக நிற்க வேண்டாம் என்று மேலிடம் கூறிவிட்டது. தேவையில்லாமல் செலவு, தோற்று போய் விடுவோம், அசிங்கப்பட வேண்டியது வரும்.

இதனால், நிற்க வேண்டாம். பார்லிமெண்ட் தேர்தலில் பார்த்து விடலாம். அதுவரை நிற்க வேண்டாம். நின்றால் கூட்டணியில் பிரச்னை ஏற்படும் என்று கூறிவிட்டனர். இதைத் தொடர்ந்து அண்ணாமலையை எடப்பாடி அணியினர் பார்க்க போகின்றனர். அதற்கு அண்ணாமலை ஒப்புதல் கொடுத்து விட்டார். இந்த நிலையில் ஓபிஎஸ் திடீரென நாங்கள் வேட்பாளரை நிறுத்துவோம் என்று அறிவிக்கிறார்.

இதை பார்த்து பாஜக மீண்டும் ஷாக் ஆகிறது. அவரும் பாஜ அலுவலகத்திற்கு சென்று எனக்கு ஆதரவு கொடுங்கள் என்கிறார். இதனால், பிரச்சனை ஏற்படுகிறது. இதனால், பாஜ யாருக்கு ஆதரவு அளிக்க போகிறது என்ற பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் அண்ணாமலை டபுள் கேம் ஆடுகிறார் என்று ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பில் குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இரண்டு பேரும் அண்ணாமலையை சந்தேகப்பட ஆரம்பித்து விட்டனர்.

அதே நேரத்தில் அதிமுகவுக்கு உரிமை கேட்டு உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் வழக்குத் தொடர்ந்துள்ளனர். தற்ேபாது இரட்டை இலைக்காக மீண்டும் தாக்கல் செய்துள்ள மனு மீது நாளை விசாரணை நடைபெறுகிறது. இது தொடர்பாக நாளை ஓபிஎஸ் தரப்பும் மனு தாக்கல் செய்ய உள்ளது. மனுதாக்கல் செய்ய நேரம் கேட்பார்கள். இதனால், நீதிமன்றம் என்ன பதில் சொல்ல போகிறது என்று தெரியவில்லை. இடைத் தேர்தல் இருக்கிறது. அதனால், நேரம் கொடுக்கமுடியாது என்று நீதிமன்றம் சொன்னால், எங்களுக்கு நேரம் வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பு கேட்கும். அப்படி இழுத்தார்கள் என்றால், அதனால், நாளையே முடிவு வருமா? என்று சந்தேகம் இருக்கிறது.  ஓபிஎஸ் தரப்பு இழுத்தார்கள் என்றால் வழக்கு தள்ளிப்போக வாய்ப்பு ஏற்படும்.

அதனால், உடனடியாக இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். வேட்புமனு தாக்கல் செய்தால் இக்கட்டான நிலையை உருவாக்க ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளார். வேட்புமனு தாக்கல் செய்யும் போது, அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்று தான் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அவரின் பி பார்ம் கொடுத்தால் தேர்தல் ஆணையம் ஏற்று கொள்ளும். அதிமுக என்று கொடுத்தால் ஏற்று கொள்ள மாட்டார்கள். தள்ளுபடி செய்ய கூட வாய்ப்பு இருக்கிறது.

இதனால், எடப்பாடி சுயேச்சையாகவும் வேட்புமனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளார். அப்படிப்பட்ட சூழ்நிலை உருவாக்க தான் ஓபிஎஸ் தரப்பு நேரம் கேட்க நாளை திட்டமிட்டுள்ளனர். வழக்கு தள்ளிப்போனால், மனுதாக்கலுக்குள் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயம் எடப்பாடி அணிக்கு ஏற்படும். சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்ய போகிறார்களா? அல்லது அதிமுக என்று வேட்புமனு தாக்கல் செய்ய போகிறார்களா? என்ற குழப்பம் உருவாகும். அதே நேரத்தில் நாளை தீர்வு காண்பது என்பதும் பிரச்சனை தான். தேர்தல் ஆணையம் இந்த முடிவை எடுங்கள் என்று உச்சநீதிமன்றம் கூற முடியாது என்று கூறப்படுகிறது. இருந்தாலும் உச்சநீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்க போகிறார்கள்.

இதனால், அதிமுக தொண்டர்களிடம் உச்சப்பட்ச குழப்பம் ஏற்பட்டுள்ளது. எடப்பாடி வந்து கவுண்டர் பெல்டில் வளர விடக்கூடாது என்பதற்காக அண்ணாமலை வளரணும் என்று பார்க்கின்றனர் என்று எடப்பாடி தரப்பு கருதுகிறது. ஓபிஎஸ் கவுண்டருக்கு சப்போர்ட் பண்ணி விடுவார் என்று அண்ணாமலை நினைக்கிறார். இது தொடர்பாக மேலிடத்தில் அண்ணாமலை தெரிவிக்கும் போது, இடைத்தேர்தல் பாஜ நடுநிலை வகித்து விடலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டதாக கூறப்படுகிறது. இது எடப்பாடிக்கு தெரிந்து அதிர்ச்சியடைந்து விட்டார். இனிமேல் பாஜவிடம் போய் யாரும் ஆதரவு கேட்க வேண்டாம்.  பாஜ ஆதரவு தேவையில்லை. கொடுத்தால் ஏற்று கொள்வோம். கொடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை.

அவர்கள் என்ன முடிவு வேண்டுமென்றாலும் எடுத்து விட்டு போகட்டும். அவங்க என்ன முடிவை எடுக்கிறார்களோ? அதே முடிவை பார்லிமெண்ட் தேர்தலில் நாம் எடுப்போம். அதனால், இனி யாரும் பாஜ கதவை தட்ட வேண்டாம். பிஜேபியிடம் எந்த பேச்சு வார்த்தையும் நடத்த வேண்டாம் என்று இரண்டாம் கட்ட தலைவர்களிடம் எடப்பாடி உத்தரவிட்டார். அதாவது பாஜ பற்றியும் பேசக்கூடாது. கூட்டணி பற்றியும் பேசக்கூடாது என்று உத்தரவு போட்டார். அதிமுக வேட்பாளர் தொடர்பாக அதிமுகவிடம் மட்டும் பேசுங்கள். மக்களிடம் ஓட்டு கேளுங்கள். பாஜ என்ன முடிவை எடுத்தாலும் சந்தோசம் தான். தனித்தே போட்டியிடுவோம் என்ற முடிவுக்கு எடப்பாடி வந்து விட்டார். பிஜேபியை கழட்டி விட எடப்பாடி திட்டமிட்டு விட்டார். வந்தால் ஏற்று கொள்வோம். வராவிட்டால் தள்ளி வைப்போம் என்ற முடிவுக்கு எடப்பாடி வந்து விட்டார்.

Related Stories: