அணைக்கரை, கொள்ளிடம் ஆற்றில் ரூ.100 கோடி உயர்மட்ட பாலத்தை விரைந்து முடிக்க வேண்டும்: விவசாயிகள் பொதுமக்கள் வலியுறுத்தல்

திருவிடைமருதூர்: திருவிடைமருதூர் அருகே அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் புதிதாக ரூ.100 கோடி மதிப்பில் கட்டப்படும் உயர்மட்ட பாலம் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று விவசாயிகள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தஞ்சாவூர் இடையே 220 கிலோ மீட்டர் நீளமுள்ள தங்க நாற்கர சாலை திட்டம் ரூ.3500 கோடி மதிப்பில் செய்யப்பட்டு வருகிறது. இதில் தஞ்சாவூர் மாவட்ட எல்லையான கொள்ளிடம் ஆற்றின் அணைக்கரை என்ற இடத்தில் கி.பி. 1840-ம் ஆண்டில் கீழணையில் இருந்து தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தடுத்து வீராணம் ஏரிக்கு சென்று அங்கு பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கும்பகோணம் - சென்னை சாலையில் அணைக்கரையில் கொள்ளிடம் ஆறு இரு பிரிவாக பிரிந்து செல்கிறது. இங்கு 1½ கிலோமீட்டர் தொலைவுக்கு மதகுகளுடன் கூடிய 2 பழைய பாலங்கள் உள்ளது. கொள்ளிடம் ஆற்றை கடக்கும் வகையில் இந்த பாலம் உள்ளது.

அது மட்டுமின்றி தஞ்சை மாவட்டத்தை சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களுடன் இணைக்கும் வகையிலும் இந்த பாலம் உள்ளது.

இந்த பாலத்தின் வழியாக பொது போக்குவரத்து நடைபெற்று வந்தது. கடந்த 2018, 2022ம் ஆண்டுகளில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கை தொடர்ந்து கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 3 லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் அணைக்கரை கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தின் பாதுகாப்பை கருதி பஸ்கள், கனரக வாகனங்கள் பாலத்தின் வழியாக செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் கும்பகோணத்தில் இருந்து சென்னை செல்லும் பஸ்கள் நீலத்தநல்லூர் - மதனத்தூர் பாலம் வழியாகவும், மயிலாடுதுறை வழியாகவும் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டன. ஆனால், பாலத்தின் வழியாக பஸ் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும் என பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் அணைக்கரை பாலத்தின் வழியாக பஸ்கள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ..

தற்போது தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களுக்கு செல்பவர்கள் பஸ்கள், கார்கள் மூலம் அணைக்கரை பாலத்தின் வழியாகவே சென்று வருகின்றனர். இந்நிலையில், அணைக்கரை பாலத்திற்கு பதிலாக, புதிதாக பாலம் ஒன்றை கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி, தஞ்சாவூர் - அரியலூர் மாவட்டத்தை இணைக்கும் வகையில் ஒன்றிய அரசின் தங்க நாற்கர சாலை திட்டத்தின் கீழ் ரூ.100 கோடி மதிப்பீட்டில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. ஆற்றின் குறுக்கே தூண்கள் அமைக்கப்பட்டு, கான்கிரீட்டால் ஆன பெரிய அளவிலான இணைப்பு பாலங்களும் தயார் செய்யப்பட்டு, அந்த பாலங்கள் இணைக்கப்பட்டு வந்தன. அதன் பிறகு ஆற்றில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் பாலம் கட்டுமான பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டது. தற்போது தண்ணீரின் அளவு குறைந்து வரத்து இல்லாததால் இந்த பணியை துரிதப்படுத்தி புதிய பாலத்தை விரைவில் அமைக்க வேண்டும் என்பது அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாகும

Related Stories: