அகஸ்தியன்பள்ளி-திருத்துறைப்பூண்டி அகல பாதையில் விரைவில் ரயில் இயக்க வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல்

வேதாரண்யம்: அகஸ்தியன்பள்ளி-திருத்துறைப்பூண்டி அகல ரயில் பாதையில் விரைவில் இயக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

வேதாரண்யம் தாலுகா அகஸ்தியன்பள்ளி- திருத்துறைபூண்டி வரை சுமார் 37 கி.மீ தூரம் அகல ரயில் பாதை அமைக்கபட்டுள்ளது. வேதாரண்யம் தோப்புத்துறை, நெய்விளக்கு குரவப்புலம் கரியாபட்டினம் திருத்துறைப்பூண்டி ரயில்வே ஸ்டேசன்கள் அமைக்கபட்டுள்ளது. பலமுறை சோதனை ஓட்டமும் நடைபெற்று, முடிந்த நிலையில் இந்த மாதம் இரண்டு முறை இந்த வழிதடத்தில் ரயில் இயக்க முடிவு செய்யப்பட்டு ஒத்திவைக்கபட்டுள்ளது வேதாரண்யத்தில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் போடப்பட்ட மீட்டர்கேஜ் பாதையில் ரயில் போக்குவரத்து நடைபெற்றது. இந்த மீட்டர் கேஜ் பாதையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

அதன் பிறகு அகஸ்தியன்பள்ளியில் இருந்து திருத்துறைப்பூண்டி வரை அகல ரயில் பாதை திட்டம் அறிவிக்கப்பட்டு கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த வழிதடத்தில் 77 பாலங்களும் 5 நிறுத்தங்களும் உள்ளன அகல ரயில்பாதை பணிகள் நிறைவு பெற்று ரயில் பாதைசோதனை ஓட்டம் நடைபெற்று, பல ஆண்டுகளுக்கு பிறகு நேற்று துவங்கபடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்றும் ரயில் ஏதோ காரணத்திற்காக சேவை துவங்கப்பட வில்லை. இதனால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். எனவே விரைவில் ரயில் சேவையை துவங்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: