வத்தலக்குண்டு குளிப்பட்டி மருதாநதி ஆற்றில் மேம்பாலம் அமைக்கும் பணி மும்முரம்

வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு அருகே குளிப்பட்டி மருதாநதி ஆற்றில் மேம்பாலம் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வத்தலக்குண்டு அருகே குளிப்பட்டியையொட்டி மருதாநதி ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றில் தண்ணீர் செல்லும் போது குளிப்பட்டி, கோம்பைபட்டி போன்ற கிராமங்களுக்கு செல்லும் மீனாட்சிபுரம், கே.உச்சபட்டி சமத்துவபுரம் உள்பட 10க்கு மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் வெங்கடாஸ்திரி கோட்டை, எம்.குரும்பபட்டி வழியாக 10 கிமீ சுற்றி செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது.

இதனால் அப்பகுதி மக்கள் நீண்ட நாளாக மருதாநதி ஆற்றின் மீது மேம்பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து வத்தலகுண்டு ஒன்றிய தலைவர் பரமேஸ்வரி முருகன், தொடர்ந்து முயற்சித்ததின் பலனாக சில மாதங்களுக்கு முன்பு ரூ.1 கோடி நிதியில் மருதாநதி ஆற்றின் மீது மேம்பாலம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து மேம்பாலம் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: