தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று வட கடலோர மாவட்டங்கள், அதை ஒட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் வெப்பநிலை இயல்பை விட, 2 - 3 டிகிரி செல்ஷியஸ் குறைவாக இருக்கும். நேற்று முன்தினம் தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய, இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்றும் அதே பகுதிகளில் நீடிக்கிறது.

இது, அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையக் கூடும். அதன்பின் தொடர்ந்து, மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, வரும் 31ம் தேதி தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, பிப்., 1ல் இலங்கை கடற்பகுதிகளை சென்று அடையும். மேலும் தமிழகத்தில் விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: