பிப்ரவரி முதல் மே மாதம் வரை கேரளாவில் மின் கட்டணம் உயர்கிறது

திருவனந்தபுரம்: கேரளாவில் மின்சாரம் அதிகம் செலவாகும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை மின்கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மின்வாரியம் கடுமையான நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இதையடுத்து கடந்த வருடம் மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் மின்சாரம் அதிக அளவில்  பயன்படுத்தப்படும் பிப்ரவரி முதல் மே மாதம் வரை கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று கேரள மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையம், கேரள அரசிடம் கோரிக்கை விடுத்தது. கடந்த வருடம் இந்த மாதங்களில் வெளியிலிருந்து மின்சாரம் வாங்கியதில் மின்வாரியத்திற்கு கூடுதலாக ரூ.87.07 கோடி செலவானது. இதை ஈடு கட்டுவதற்காக இந்த வருடம் பிப்ரவரி 1 முதல் மே 31ம் தேதி வரை மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு கேரள அரசு தற்போது அனுமதி அளித்துள்ளது. இதன்படி  இந்த மாதங்களில் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு யூனிட்டுக்கு 9 பைசா அதிகரிக்கும்.  மாதத்தில் 40 யூனிட் வரை வீடுகளில் பயன்படுத்துபவர்களுக்கு கட்டண உயர்வு  கிடையாது.

Related Stories: