பீகாரில் 160க்கும் மேற்பட்ட வெடிபொருள் பறிமுதல்

புதுடெல்லி: பீகாரில் நக்சல் தேடுதல் வேட்டையின்போது 160க்கும் மேற்பட்ட சக்தி வாய்ந்த வெடிபொருட்களை மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் பறிமுதல் செய்தனர். அவுரங்காபாத் மாவட்டம் லதுயா பகாட் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் முதலில் 13 சக்தி வாய்ந்த வெடிமருந்துகளையும், தொடர்ந்து 149 வெடிகுண்டுகளையும் பறிமுதல் செய்தனர். மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும், பீகார் மாநில போலீசாரும் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.

Related Stories: