போராட்டக்காரர்கள், போலீஸ் இடையே நாகாலாந்தில் திடீர் மோதல்

கவுகாத்தி: நாகாலாந்தில் அசாம் ரைபிள்ஸ் படையினருக்கும் நாகாலாந்து  தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. நாகாலாந்து மாநிலத்தில் ‘நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில்“ என்ற பெயரில் செயல்பட்டு வரும் போராளி குழுவினர் நாகாலாந்தை இந்தியாவில் இருந்து பிரிக்க வேண்டும், வடகிழக்கு மாநிலங்களில் நாகாலாந்து இனமக்கள் வாழும் இடங்களை உள்ளடக்கிய ‘நாகாலிம் ‘ என்று தனிநாடாக அறிவிக்க கோரி தொடர்ந்து போராடி வருகின்றனர். குடியரசு தினத்தையொட்டி அசாம் ரைபிள்ஸ் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். பணி முடிந்து அவர்கள் இன்டாங்கி தேசிய பூங்கா அருகில் ஓய்வு எடுத்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற நாகாலாந்து சோசலிஸ்ட் கவுன்சில் பிரிவினருக்கும், அசாம் ரைபிள்ஸ் படையினருக்கும் இடையே சிறிய மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இருதரப்பிலும் எந்த பாதிப்புகளும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

Related Stories: