சத்தியமங்கலம் அருகே குடியிருப்பு பகுதிக்கு வந்து நாயை துரத்திய சிறுத்தை: மயிரிழையில் உயிர் தப்பிய நாய்

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பகுதியில் விளாமுண்டி வனப்பகுதியை ஒட்டி கல் உடைக்கும் கிரசர் இயங்கி வருகிறது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் கிரசர் பகுதியில் நடமாடுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று இரவு 9.45 மணியளவில் கிரசர் பகுதியில் ஒரு நாய் காவலுக்கு படுத்திருந்தது.

அப்போது நாயை பிடிப்பதற்காக  சிறுத்தை துரத்தியது. சிறுத்தையை கண்ட நாய் வேகமாக ஓடி மயிரிழையில் உயிர் தப்பியது. சிறுத்தை நாயை துரத்திய காட்சி அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. இந்நிலையில் அங்கு இருந்தவர்கள் சிறுத்தை நாய் துரத்தியதை கண்டு அச்சமடைந்தனர்.

சிறுத்தை நாயை துரத்தும் காட்சி வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது குறித்து விளாமுண்டி வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: