ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பணிகளுக்காக, 118 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை அமைத்தார் ஓ. பன்னீர்செல்வம்

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பணிகளுக்காக, 118 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை அமைத்து ஓ. பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி தேர்தலையொட்டி, முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் தேர்தல் பணிக்குழுவை அமைத்து அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் பிப். 27-ம் தேதி நடைபெறுகிறது. திமுக கூட்டணியில், காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். தேமுதிக சார்பில் ஈரோடு கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆனந்த், அமமுக சார்பில் சிவபிரசாந்த் ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். அதிமுக சார்பில் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், நேற்று முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில், 117-பேர் கொண்ட தேர்தல் பணிக் குழுவை அமைத்து அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இதனை தொடர்ந்து இன்று இடைத்தேர்தல் குறித்து இன்று ஓ பன்னீர் செல்வம் சென்னையில் உள்ள தனது இல்லத்தில் நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் இரட்டை இலை சின்னம் ஒதுக்கக்கோரி எடப்பாடி பழனிச்சாமி உச்சநீதிமன்றம் சென்ற நிலையில், கேவியட் மனு தாக்கல் செய்யலாமா?, அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதனை அடுத்து முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தலைமையில் இந்த தேர்தல் பணிக்குழுவை அமைத்து ஓபிஎஸ் உத்தரவிட்டுள்ளார். இந்த பணிக்குழுவில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், பிரபாகர், மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி N. நடராஜன், அ. மனோகரன்,PVK பிரபு, சாகுல் அமீது, மு. கவிதா இராசேந்திரன், காமராஜ், R.T. ராமச்சந்திரன்,  A. சுப்புரத்தினம், R. ராஜலட்சுமி, திருமாறன், மேலும் பலர் இடம் பெற்றுள்ளனர்.

Related Stories: