புதுச்சேரிக்கு ரூ.11,600 கோடிக்கு முழு பட்ஜெட்டை மார்ச் மாதமே தாக்கல் செய்ய திட்டக்குழு முடிவு

புதுச்சேரி: புதுச்சேரியில் 2023 - 2024ம் நிதியாண்டிற்கு ரூ.11,600 கோடிக்கு முழு பட்ஜெட் தாக்கல் செய்ய திட்டமிட்டு ஒன்றிய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்க திட்டக்குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் வழக்கமாக மார்ச் மாதம் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில் கடந்த 12 ஆண்டுகளாக இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டு வந்தது.

இந்த நடைமுறையை மாற்றி 2023-2024 ஆண்டின் முழுமையான பட்ஜெட்டை மார்ச் மாதம் தாக்கல் செய்ய புதுச்சேரி அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக துணைநிலை ஆளுநர் தமிழிசை தலைமையில் நடைபெற்ற மாநிலத்திட்ட குழு கூட்டத்தில் முதலமைச்சர் ரங்கசாமி அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டம் முடிந்த பிறகு ஆளும் கட்சி தரப்பில் யாரும் பதில் தராமல் புறப்பட்ட நிலையில் ரூ.11,600 கோடிக்கு முழு பட்ஜெட் தாக்கல் செய்ய திட்டக்குழுவில் முடிவெடுக்கப்பட்டதாக எதிர்க்கட்சி தலைவர் சிவா கூறியுள்ளார்.

Related Stories: