அனுமதி இல்லாமல் செயல்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு சீல்: மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி

திருவொற்றியூர்: மணலி மண்டலம் 19வது வார்டுக்குட்பட்ட மாத்தூர், காமராஜர் சாலையில் முறையான அனுமதி இல்லாமல், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்படுவதாக முதல்வர் தனி பிரிவுக்கு, சமூக ஆர்வலர் மா.பொ.பழனி என்பவர் புகார் தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையில் மணலி மண்டல உதவி ஆணையர் கோவிந்தராஜ் தலைமையில், செயற்பொறியாளர் காமராஜ், உதவி செயற்பொறியாளர் தேவேந்திரன், உதவி பொறியாளர் சுமித்ரா ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று மேற்கண்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சோதனை செய்தனர்.

அப்போது, அனுமதி இல்லாமல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வந்ததோடு, அந்த கட்டிடத்திற்கும் அனுமதி இல்லாமல் இருப்பது தெரிந்தது. இதையடுத்து, குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் கட்டிடம் ஆகியவற்றுக்கு மணலி மண்டல அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

Related Stories: