பராமரிப்பு பணி காரணமாக விருகம்பாக்கம் மயானம் மூடல்: மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: கோடம்பாக்கம் மண்டலத்திற்குட்பட்ட விருகம்பாக்கம் மயானபூமியின் தகன மேடையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பொதுமக்கள் ஏ.வி.எம். அல்லது நெசப்பாக்கம் மயான பூமிகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சி, கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-128, விருகம்பாக்கம் மயானபூமியில் மின்சார தகனமேடையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் வரும் 10ம் தேதி வரை மயானபூமியில் மின்சார தகனமேடை இயங்காது.

எனவே, பராமரிப்பு பணிகள் நடைபெறும் நாட்களில் பொதுமக்கள் அருகிலுள்ள ஏ.வி.எம் அல்லது நெசப்பாக்கம் மயானபூமிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.இவ்வாறு சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: