சர்வோதய பள்ளி நிறுவனர் நாகலட்சுமி மரணம்

தாம்பரம்: சர்வோதய இயக்கத்தை சேர்ந்த ஜெயபிரகாஷ் நாராயணன் சீடரும், குரோம்பேட்டை சர்வோதய பள்ளி நிறுவனருமான நாகலட்சுமி (98) நேற்று முன்தினம் இரவு மரணம் அடைந்தார். இவர், சிறுவயதில் நாக்பூர் அருகில் உள்ள காந்தியின் வார்தா சேவாகிராம் ஆசிரமத்தில் தங்கி இருந்து சேவை புரிந்துள்ளார். குரோம்பேட்டையில் 1957ம் ஆண்டில் இவர் தொடங்கிய சர்வோதய பள்ளியை ஜெயபிரகாஷ் நாராயணன் திறந்து வைத்தார். இவரது பள்ளியில் காயிதே மில்லத் பேரன் தாவூத் மியாகான், தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் கோ.காமராஜ் உள்ளிட்டோர் பயின்றுள்ளனர்.

நாகலட்சுமியின் உடல் குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலை மின் எரியூட்டு மையத்தில் நேற்று தகனம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு ஏராளமான முன்னாள் மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர். தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் கோ.காமராஜ், தனது மனைவியோடு வந்து  ஆசிரியைக்கு கண்ணீர்மல்க இறுதி அஞ்சலி செலுத்தினார். மற்றொரு மாணவரான காயிதே மில்லத்தின் பேரன் தாவூத் மியாகானும் அஞ்சலி செலுத்தினார்.

Related Stories: