காசிமேடு பகுதியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது

தண்டையார்பேட்டை: காசிமேடு பகுதியில் காஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 வலிபர்களை போலீசார் கைது செய்தனர். காசிமேடு மீன்பிடி துறைமுக பகுதியில் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் இருந்தபோது, சந்தேகத்தின்பேரில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து, விசாரணை செய்தனர். அப்போது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால், போலீசார் அவர்களை சோதனையிட்டபோது, 1 கிலோ 100 கிராம் கஞ்சா இருப்பது தெரிந்தது. அதை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், தண்டையார்பேட்டை குப்பம் 5வது தெருவை சேர்ந்த விஷால் (எ) குண்டு விஷால் (28), காசிமேடு சிங்காரவேலன் நகரை சேர்ந்த சஞ்சய் (28) என்பதும், இவர்கள் காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே உள்ள அண்ணாநகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரிந்தது. அவர்களை கைது செய்தனர்.

Related Stories: