முட்டை விலை தொடர் சரிவு

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன், முட்டை விலையில் 30 காசுகள் குறைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று, என்இசிசி நாமக்கல் மண்டல சேர்மன் டாக்டர் செல்வராஜ், முட்டை விலையில் மேலும் 25 காசுகள் குறைத்துள்ளார். இதன்படி ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை, 515 காசில் இருந்து 490 காசாக குறைந்துள்ளது.

மற்ற மண்டலங்களில் முட்டை விலை தொடர்ந்து குறைக்கப்பட்டு வருகிறது. கடந்த 6 நாட்களில் ஒரு முட்டைக்கு 75 காசுகள் வரை குறைந்துள்ளது. முட்டை விலை தொடர் சரிவால், கோழிப்பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

Related Stories: