பிபிசி ஆவணப்படம் திரையிட முயன்ற டெல்லி பல்கலை.யின் 24 மாணவர்கள் கைது

புதுடெல்லி: பிரதமர் மோடி பற்றிய சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படத்தை திரையிட ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. ஆனால் தடையை மீறி இதனை திரையிட முயன்ற ஜேஎன்யூ மற்றும் ஜமியா பல்கலை. மாணவர்கள் நேற்று முன்தினம் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இந்த ஆவணப்படத்தை நேற்று டெல்லி பல்கலை.யின் கலைத்துறை மாணவர்கள் திரையிட முயன்றனர்.

இது குறித்து பல்கலை. தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு வந்த போலீசார் அவர்களை கலைந்து செல்ல வலியுறுத்தினர். அதனை மீறி பொது அமைதிக்கு களங்கம் விளைவிக்க முயன்ற 24 மாணவர்களை போலீசார் கைது செய்தனர். மாணவர்கள் அனுமதி பெறவில்லை. அதனை திரையிட பல்கலை. ஒருபோதும் அனுமதிக்காது என்று பல்கலை. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories: