ஒன்றிய அமைச்சர் மகன் விடுதலை

லக்னோ: உத்தரப்பிரதேசம் லக்கிம்பூர் கெரியில் 2021ம் ஆண்டு விவசாயிகள் போராட்டத்தில் ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஸ் மிஸ்ரா வந்த ஜீப் புகுந்ததில், 4 விவசாயிகள் உயிரிழந்தனர்.  

இதையடுத்து ஆஷிஸ் மிஸ்ராவை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் ஏறக்குறைய ஓர் ஆண்டுக்குப்பின் உச்ச நீதிமன்றம், ஆஷிஸ் மிஸ்ராவுக்கு  இடைக்கால ஜாமீன் வழங்கியது. இதை தொடர்ந்து சிறையில் இருந்து நேற்று ஆஷிஸ் மிஸ்ரா விடுதலை செய்யப்பட்டார்.

Related Stories: