பாகிஸ்தான் கரன்சி மதிப்பு கடும் சரிவு: ஒரு டாலருக்கு ரூ.262.60 ஆனது

கராச்சி: வரலாறு காணாத அளவுக்கு பாகிஸ்தான் பயங்கர நிதிச்சிக்கலில் உள்ளது. இதனால் அங்கு உணவு தட்டுப்பாடு, விலை வாசி உயர்வு, மின்தடை, வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து திவால் நிலையில் உள்ளது. இதை தவிர்க்க பாகிஸ்தானுக்கு சவுதி, ஐக்கிய அரபு எமிரேட் நாடுகள் நிதிஉதவி செய்வதாக அறிவித்து உள்ளன.

இந்தநிலையில் அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் கரன்சி மதிப்பு மிகவும் சரிந்து நேற்று ரூ.262.6 ஆக இருந்தது. நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.34 குறைந்துள்ளது. இதனால் பாகிஸ்தான் மேலும் நிதிப்பிரச்னையில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Related Stories: