ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிமுகவின் சார்பில் கூடுதலாக 5 பொறுப்பாளர்கள் நியமனம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக அதிமுக சார்பில் கூடுதலாக 5 தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை நியமனம் செய்து எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்.27ம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக, ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுடன் கூடுதலாக 5 தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். அதன்படி, அமைப்பு செயலாளர் முன்னாள் எம்.பி. கே.கோபால், முன்னாள் அமைச்சர் வளர்மதி, முன்னாள் எம்.பி. ரத்தினவேல், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆசைமணி, அமைப்புச்செயலாளர் சிவா.ராஜமாணிக்கம் மற்றும் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் நியமிக்கப்படுகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: