தென்னாப்பிரிக்காவுடன் ஒப்பந்தம் அடுத்தமாதம் 12 சிவிங்கி புலிகள் இந்தியா வருகை

புதுடெல்லி: அடுத்த மாதம் தென்னாப்பிரிக்காவில் இருந்து 12 சிவிங்கி புலிகள்  இந்தியாவுக்கு கொண்டு வரப்படுகிறது. இந்தியாவில் அழிந்த விலங்குகளாக கருதப்படும் சிவிங்கி புலிகளை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வர திட்டம் வகுக்கப்பட்டது. அதன்படி கடந்த  ஆண்டு நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட 8 சிவிங்கி புலிகள் மத்திய பிரதேசம் மாநிலம் குனோ தேசிய பூங்காவில் திறந்து விடப்பட்டன. இந்நிலையில் மேலும் 12  சிவிங்கி புலிகள் இந்தியாவுக்கு ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட இருக்கிறது. கடந்த முறை நமீபியாவில் இருந்து இந்த விலங்குகள் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் தற்போது தென் ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட உள்ளன. இதுகுறித்து ஒன்றிய அரசு அதிகாரி கூறுகையில்,‘‘ 12 சிவிங்கி புலிகளை குனோவுக்கு கொண்டுவர முடிவாகியது. கடந்த வாரம் தென்னாப்பிரிக்காவுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி 7 ஆண், 5 பெண் சிவிங்கி புலிகள் கொண்டுவரப்பட உள்ளன.  அடுத்த மாதம் 15ம் தேதி இந்த விலங்குகள் இந்தியா கொண்டு வரப்படும்’’ என்றார்.

Related Stories: