எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டி 4 ஆண்டுகள் நிறைவு ஒரே இந்தியாவின் அடையாளம் ஒரே செங்கல்தானா? பிரதமர் மோடிக்கு மதுரை எம்பி கேள்வி

மதுரை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், ‘ஒரே இந்தியாவின் அடையாளம் ஒரே செங்கல்தானா?’ என பிரதமர் மோடிக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கடந்த 2019, ஜன.27ல் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், இதுவரை கட்டுமான பணிகள் தொடங்கப்படவில்லை. இதுகுறித்து கடைசியாக ஆர்டிஐ மூலம் பெறப்பட்ட நிலவர விபரங்களில், ‘மொத்த திட்ட தொகை ரூ.1,977.8 கோடியாகும். ஜப்பான் நிறுவனமான ஜிகா ரூ.1,621.8 கோடி வழங்குகிறது. அதாவது, ஜிகா 82 சதவீதம் தொகையும், ஒன்றிய அரசானது 18 சதவீத தொகையும் வழங்குகின்றன.

இதுவரை ஜிகா நிறுவனமானது மதுரை எய்ம்ஸ்க்கென நிதியை விடுவிக்கவில்லை. திருத்தப்பட்ட திட்ட மதிப்பீடு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது’ என தெரிய வந்துள்ளது. இந்நிலையில் மதுரை எம்பி சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள ட்விட்டரில், ‘‘மதுரை எய்ம்ஸ் மருத்துமவனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய பிரதமர்,”இந்நிகழ்வு ஒரே இந்தியா உன்னத இந்தியா என்ற கருத்தை பிரதிபலிப்பதாக உள்ளது” என பேசியிருந்தார். ‘‘ஒரே இந்தியாவின் அடையாளம் ஒரே செங்கல் தானா?’’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: