நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு 177 ரன்கள் இலக்கு நிர்ணயம்..!

ராஞ்சி: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு 177 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியா-நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இந்தியா 3-0 என கைப்பற்றிய நிலையில் அடுத்ததாக 3 டி.20 போட்டிகளில் மோதுகின்றன. இதில் முதல் போட்டி ராஞ்சியில் இன்று நடக்கிறது. ராஞ்சியில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது.

நியூசிலாந்து அணியில் குறிப்பாக அர்ஸ்தீப்சிங் வீசிய கடைசி ஓவரை மூன்று சிக்சர், ஒரு பவுண்டரி விளாசினார். அந்த ஓவரில் மட்டும் அர்ஸ்தீப் சிங் 27 ரன்களை எதிரணிக்கு வாரி வழங்கினார். மிட்சேல் 30 பந்துகளில் 3 பவுண்டரி, 5 சிக்சருடன் 59 ரன்கள் எடுத்தனர். இந்திய தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். தொடர்ந்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்க உள்ளது.

Related Stories: