ஜன.,30-ல் காங்கிரசுடன் இணைப்பு? மக்கள் நீதி மய்யம் கட்சியின் இணையதளம் ஹேக் செய்யப்பட்டதால் பரபரப்பு

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் வலைதள பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு மதுரையில் தனது மக்கள் நீதி மய்யம் கட்சியை ராகுல்காந்தி தொடங்கினார். அதனைத் தொடர்ந்து நடைபெற்று நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களிலும் தனித்து களம் கண்ட மக்கள் நீதி மய்யம் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இதனிடையே சமீபகாலமாக காங்கிரஸ் கட்சியுடன் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி நல்லுறவை வளர்த்து வருகிறது. அதன்படி கடந்த டிசம்பர் 24ம் தேதி டெல்லியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்ட இந்திய ஒற்றுமை பயணத்தில் கமல்ஹாசன் பங்கேற்றார்.

ராகுல் காந்தியின் தனிப்பட்ட அழைப்பினாலேயே கமல்ஹாசன் கலந்துகொண்டதாக மக்கள் நீதி மய்யம் தரப்பு கூறியது. இதனிடையே ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடும் நிலையில் மக்கள் நீதி மய்யம் அவருக்கு ஆதரவு வழங்கி உள்ளது. இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வலைதள பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. ஜன.30ம் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியை, காங்கிரஸ் கட்சியுடன் இணைக்க உள்ளதாக மநீம வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்ததால் பரபரப்பு நிலவி வருகிறது.

காங்கிரஸ் கட்சியுடன் இணைப்பு என்பது தவறான தகவல் என மக்கள் நீதி மய்யம் கட்சியினர் விளக்கம அளித்துள்ளனர். செய்யப்பட்டுள்ள வலைதள பக்கத்தை பழைய நிலைக்கு கொண்டு வரும் முயற்சியில் மநீம கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து மக்கள் நீதி மய்யத்தின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில்; மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரப்பூர்வ வலைதளம் விஷமிகளால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. ஜனநாயக சக்திகளை ஒடுக்கியே பழக்கப்பட்ட ஈனர்களின் இழிசெயல்களுக்கு அஞ்சாமல் தக்க பதிலடி கொடுப்போம் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: