டெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர் அமைப்பினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு..!

டெல்லி: டெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர் அமைப்பினர், போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. மோடி குஜராத் முதல்வராக  இருந்தபோது நடந்த கலவரத்தை மையமாக வைத்து இந்த ஆவணப்படம்  தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. இந்த ஆவண படத்தின் இரண்டாம் பாகம் அண்மையில் டிவியில் ஒளிபரப்பப்பட்டது. தடையை மீறி பிபிசியின் ஆவணப்படத்தை டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜே.என்.யூ) திரையிட மாணவர்கள் திட்டமிட்டிருந்தனர். இதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதி மறுத்தது. தடையை மீறி திரையிடப்பட்ட பிபிசி ஆவணப்படத்தை பார்த்துக் கொண்டிருந்த மாணவர்கள் மீது சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

இதில் சில மாணவர்கள் காயமடைந்தனர். தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் டெல்லி பல்கலைக்கழக வளாகத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மாணவர்களை குண்டுகட்டாக போலீசார் தூக்கி சென்றனர். இந்த உத்தரவை மீற இருந்த மாணவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு தகராறு ஏற்பட்டது. தொடர்ந்து மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

Related Stories: