உக்ரைனில் 11 பேர் பலி: 35 கட்டிடங்கள் சேதம்

கீவ்: உக்ரைன் மீதான ரஷ்யப் படைகளின் தாக்குதல் ஓராண்டை ெநருங்கும் நிலையில், அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகள் உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை வழங்கி வருகின்றன. உக்ரைனுக்கு ஐரோப்பிய நாடுகள் உதவி வருவதால் ரஷ்யப் படைகளின் தாக்குதல்கள் மேலும் தீவிரமாகி உள்ளது. நேற்று உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்யப் படைகள் பெரும் தாக்குதல்களை நடத்தின.

ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலமாக தாக்குதல் நடத்தியதில் 11 பேர் கொல்லப்பட்டதாவும், 11 பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 11 இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், 35 கட்டிடங்கள் சேதமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம் ரஷ்யாவின் 24 ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் கூறியுள்ளது.

Related Stories: