ஜம்மு காஷ்மீரில் தனது நடைபயணத்திற்கான பாதுகாப்பு விஷயத்தில், காவல்துறை தோல்வியடைந்துவிட்டது: ராகுல்காந்தி குற்றச்சாட்டு..!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தனது நடைபயணத்திற்கான பாதுகாப்பு விஷயத்தில், காவல்துறை தோல்வியடைந்துவிட்டதாக ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். ஜம்மு கஷ்மீரில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக ராகுல் காந்தியின் பாதயாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்திய ஒற்றுமை நடைப்பயணம் காஷ்மீரில் நிறைவடைய உள்ளது. தமிழ்நாட்டில் தொடங்கிய பயணம் கேரளா, கர்நாடாகா, தெலங்கானா, ஆந்திர பிரதேசம், மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களை தொடர்ந்து தற்போது காஷ்மீரில் நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் அனந்த் நாக்கில், ராகுல்காந்தி இன்று இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டார். 11 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபயணம் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், பயணம் தொடங்கிய 500 மீட்டரிலேயே ரத்து செய்யப்பட்டது. இது குறித்து பேசிய ராகுல் காந்தி; ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் செயல்பாடு தோல்வியடைந்ததாகவும், கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டிய காவலர்களை எங்கும் காண முடியவில்லை. தான் மேற்கொண்டு யாத்திரை செல்வதை தனது பாதுகாப்பு அதிகாரிகள் விரும்பாததால், நடைபயணத்தை ரத்து செய்ததாகவும் தெரிவித்தார்.

Related Stories: