டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெரும் திட்டம் தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு

சென்னை: டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெரும் திட்டம் தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் பாராட்டியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதி பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்து வருகிறது. குறிப்பாக இந்த மலை வனப்பகுதிகளில் டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மது பாட்டில் கூடுதலாக ரூ. 10க்கு விற்றுவிட்டு காலி பாட்டில்களை திரும்பத்தரும்பொழுது அவரகள் கொடுக்கக்கூடிய ரூ. 10 மீண்டும் பெற்றுக்கொள்ளலாம் என யோசனை தெரிவித்திருந்தது.

சுற்றுசூழல் கருதி இந்த யோசனையை உயர் நீதிமன்றம் டாஸ்மாக் நிறுவனத்திற்கு தெரிவித்திருந்தது. காலி மது பாட்டில் திரும்பப்பெறும் திட்டத்தை கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, திருமலை, கொல்லிமலை, மேகமலை ஆகிய மலைவாசக தளங்களிலும், தேசிய பூங்காக்கள் சரணாலயம் அமல் படுத்த வேண்டும் என ஏற்கனவே டாஸ்மாக் நிறுவனத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

மேலும் கோவை மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் நவம்பர் 15ம் தேதி முதல் இறுமாதங்களுக்கு அமல் படுத்தி அந்த அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்படியும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. எனவே இந்த வழக்கானது நீதிபதி சதிஷ் குமார், வரதச்சக்கரவத்தி, ஆகியோர் விசாரணைக்கு முன்னிலையில் வந்தது, அப்போது அந்த பாட்டில்களை சேகரித்து வைப்பதற்கு காலி இடங்களை கண்டறிவது, அந்த ஊழியர்களுக்கு பயிற்சி அளிப்பது உள்ளிட்ட அவசியங்கள் உள்ளதால் , பெரம்பலூர் மற்றும் கோவை மாவட்டம் காலி பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை அமல்படுத்தல் இறுமாத கால அவகாசம் வேண்டும் என டாஸ்மாக் நிறுவனம் சார்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்தர் கேட்டு கொண்டுள்ளார்.

மேலும் தமிழ்நாடு முழுவதும் மலை பகுதிகளில் உள்ள 103 கடைகளிலும் இந்த திட்டம் அமல்படுத்த உள்ளதாகவும், நீலகிரியில் 78% பாட்டில்கள் திரும்பப் பெற்றுள்ளதாகவும், வேலூரில் 98% காலி பாட்டில்கள் திரும்பப் பெற்றுள்ளதாகவும், திண்டுக்கல்லில் 91% காலி பாட்டில்கள் திரும்பப் பெற்றுள்ளதாகவும் வழக்கறிஞர் அறிக்கை தாக்கல் பதிவு செய்துள்ளார். இத்திட்டம் அமல்படுத்துவதிலுள்ள முன்னேற்றம் குறித்து அரசுக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், அந்த பாட்டில்களை கண்டறியும் வகையில் QR CODE முறை பயன்படுத்தலாம் என்றும் யோசனை தெரிவித்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் திரும்பப்பெற்ற பாட்டில்களை விற்பனை செய்வதன் மூலம் வருவாய்  விவரங்களையும் அறிக்கை தாக்கல் செய்ய டாஸ்மாக் நிறுவனத்திற்கு உத்தரவிட நீதிபதிகள், இந்த வழக்கு ஏப்ரல் 1ம் தேதி ஒத்திவைத்து இருக்கிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: