மகளிர் யூ19 உலகக்கோப்பை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது இந்திய அணி

பிரிட்டோரியா: மகளிர் யூ19 உலகக்கோப்பை இறுதி போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றது. தென்னாப்பிரிக்காவின் பாட்சஸ்ட்ரோமில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி; 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்தது. ஜார்ஜியா அதிகபட்சமாக 35 ரன்கள் எடுத்தார். முதல் 7 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்ததால் நியூசிலாந்து அணியால் விரைவாக ரன்கள் எடுக்க முடியாமல் போனது. பர்ஷவி சோப்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தொடர்ந்து 108 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய யு-19 அணி; 14.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் நியூஸிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் 8 விக்கெட்களை வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி இறுதி வெற்றி பெற்றது. சிறப்பாகப் பந்துவீசிய பர்ஷவி சோப்ரா ஆட்டத்தின் சிறந்த வீராங்கனையாகத் தேர்வானார். முதல்முறையாக நடைபெறும் மகளிர் யு-19 டி20 உலகக் கோப்பைப் போட்டியில் ஷஃபாலி வர்மா தலைமையிலான இந்திய அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

Related Stories: