கடலூரில் சனாதன இந்து தர்ம எழுச்சி பேரணி நடத்த இந்து மக்கள் கட்சிக்கு உயர்நீதிமன்றம் அனுமதி மறுப்பு

சென்னை: கடலூரில் சனாதன இந்து தர்ம எழுச்சி பேரணி நடத்த இந்து மக்கள் கட்சிக்கு உயர்நீதிமன்றம் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மாநாடு மட்டும் நடத்த இந்து மக்கள் கட்சிக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாளை வள்ளலார் பிறந்த தின நிகழ்ச்சியும், ஜன.29-ல் சனாதன இந்து தர்ம எழுச்சி பேரணி நடத்தவும் இந்து மக்கள் கட்சி திட்டம் திட்டியுள்ளது.

இந்து மக்கள் கட்சியின் நிகழ்ச்சிகளுக்கு காவல்துறை அனுமதி மறுத்ததை எதிர்த்து ஆர்.எஸ்.தேவா என்பவர் வழக்கு தொடர்ந்தார். பேரணி நடத்த உள்ள இடம் போக்குவரத்து மிகுந்த பகுதி என்பதால் அனுமதி வழங்க இயலாது என காவல்துறை தரப்பில் பதில் அளித்துள்ளனர்.

பிற மத வழிபாட்டுத் தலங்கள் உள்ளதால் பேரணியில் முழக்கம் எழுப்பினால் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு என்று  போலீசார் கூறியுள்ளனர். சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதால் பேரணி, மாநாட்டிற்கு அனுமதி மறுக்கப்பட்டது என்று காவல்துறை தரப்பில் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மாநில மாநாட்டை மட்டும் ஜன.29-ம் தேதி மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Related Stories: