தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்: அலுவலகம் முன் சம்பா நெல்மணிகளை கொட்டிய விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தஞ்சை: தஞ்சையில் அறுவடை செய்த சம்பா நெல்லை கொள்முதல் செய்திட கோரி ஆட்சியர் அலுவலகத்தின் முன் நெல்மணிகளை கொட்டி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு வந்த விவசாயிகள் திருஆரூரான் சர்க்கரை ஆலை பிரச்சனையில் தமிழ்நாடு அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது அம்மாபேட்டையில் சம்பா நெல் அறுவடை பணிகள் முழுவீச்சில் நடைபெறும் நிலையில் கொள்முதல் நிலையங்கள் இதுவரை திறக்காததை கண்டித்தும் அவர்கள் ஆட்சியர்  அலுவலகம் முன்பு நெல்மணிகளை கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

Related Stories: