காதலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஆத்திரத்தில் ரூ.70 லட்சம் மதிப்பிலான சொகுசு காரை எரித்த இளம் டாக்டர்

காஞ்சிபுரம்: பேசிக் கொண்டிருந்த போது திடீரென்று காதலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் ஆத்திரமடைந்த இளம் டாக்டர் தனது ரூ.70 லட்சம் மதிப்பிலான பென்ஸ் சொகுசு காரை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். கார் முற்றிலும் எறிந்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் கவின் (28) வயதான இந்த இளைஞர் காஞ்சிபுரம் தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்து முடித்துள்ளார்.  

இவர் அதே கல்லூரியில் தன்னுடன் படித்து வந்த காவியா என்ற மாணவியை காதலித்து வந்துள்ளார். தற்போது படிப்பு முடிந்த பின்னர், காஞ்சிபுரம் அடுத்த ராஜகுலம் பகுதியில் இருக்கும் குளக்கரை அருகே காதலியுடன் பென்ஸ் காரில் வந்துள்ளார். பின்னர் இருவரும் குளக்கரை அருகே பேசிக்கொண்டு இருந்துள்ளார்.  அப்போது திடீரென்று காதலர்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இதில் காதலியின் மீது உள்ள ஆத்திரத்தில் தனது 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான பென்ஸ் காரை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார்.  குளக்கரையில்  கார் ஒன்று தீப்பிடித்து எரிவதை பார்த்து சிலர் போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது கார் முற்றிலும் எரிந்து எலும்பு கூடாக இருந்திருக்கிறது.  

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த கார் கவின் என்பவருக்கு சொந்தமானது என்பதும்,  காதலியின் மீது உள்ள ஆத்திரத்தால் சொந்த சொகுசு காரை எரித்து நாசமாக்கியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: