மருத்துவத்துறையில் 4 இயக்குனர் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: மருத்துவத்துறையில் காலியாக உள்ள 4 இயக்குனர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.  டிவிட்டரில் அவர் விடுத்திருக்கும் செய்தியில் தமிழ்நாடு அரசின் மருத்துவத்துறையில் மொத்தமுள்ள 6 இயக்குனர் பணியிடங்களில் மருத்துவக் கல்வி இயக்குனர், மருத்துவ சேவைகள் இயக்குனர், மருத்து கட்டுப்பாட்டு இயக்குனர், இஎஸ்ஐ இயக்குனர் ஆகிய 4 இயக்குனர் பணிகள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணி சுமை மிகுந்த இத்தகைய பணியிடங்களை கூடுதல் பொறுப்பாக மற்றொரு அதிகாரியிடம் வழங்குவதால் மருத்துவத்துறை பணிகள் பாதிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, மருத்துவத்துறையின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு காலியாக உள்ள 4 இயக்குனர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.   

Related Stories: