கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை பிப்.24-ம் தேதிக்கு ஒத்திவைத்தது உதகை நீதிமன்றம்

உதகை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை பிப்.24-ம் தேதிக்கு உதகை நீதிமன்றம் ஒத்திவைத்தது. தோலை தொடர்பு நிறுவங்களிடம் இருந்து தகவல் பெற வேண்டி உள்ளதாக சிபிசிஐடி கொடுத்தால் அவகாசம் கேட்டதால் விசாரணையை ஒத்திவைத்துள்ளது. விசாரணைக்காக அரசு தரவு வழக்கறிஞர்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆகியோர் ஆஜாக்கினர்.  கோடநாடு  வழக்கு தொடர்பாக இதுவரை 48 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளதாக நீதிமன்றத்தில் சிபிசிஐடி தகவல் தெரிவித்துள்ளது.

உதகை நீதிமன்ற நடுவர் முருகன் முன்னிலையில் வாலையார் மனோஜ் உள்ளிட்டோர் ஆஜராகியுள்ளனர். வெளிமாநிலங்களுக்கு விசாரணைக்கு செல்லவேண்டியிருப்பதால் கூடுதல் கால அவகாசம் சிபிசிஐடி கோரியது. இந்திலையில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை பிப்.24-ம் தேதிக்கு உதகை நீதிமன்றம் ஒத்திவைத்தது.

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக அப்போதைய நீலகிரி எஸ்பி முரளி ரம்பா உள்பட 48 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி உள்ளதாக அரசு வக்கீல் தெரிவித்தார். மேலும் இவ்வழக்கு விசாரணை பிப்.24ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் மற்றும் பங்களா உள்ளது. ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த பங்களாவில் கொள்ளை சம்பவம் நடந்தது. இதில், எஸ்டேட் காவலாளி ஓம் பகதூர் கொல்லப்பட்டார். பங்களாவிலிருந்து விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் சொத்து ஆவணங்கள், இதர பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக கேரளாவை சேர்ந்த சயான், வாளையார் மனோஜ் உள்ளிட்ட 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். அதிமுக ஆட்சிக்காலத்தில் இவ்வழக்கு விசாரணையில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை. வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் 10 பேரும் தற்போது ஜாமினில் உள்ளனர். இவ்வழக்கு விசாரணை ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் கூடுதல் விசாரணை மீண்டும் தீவிரமடைந்தது. மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட சயான் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள், ஜெயலலிதாவின் தோழி சசிகலா உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில் இவ்வழக்கு கடந்த அக்டோபர் மாதம் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. தனிப்படையினர் 1500 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கையை ஊட்டி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். மற்றொரு நகல் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. சிபிசிஐடி கூடுதல் எஸ்பி முருகவேல் தலைமையில் டிஎஸ்பிக்கள் சந்திரசேகர், அண்ணாதுரை அடங்கிய குழுவினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். கொடநாடு கொலை கொள்ளை சம்பவம் நடைபெற்ற போது நீலகிரி மாவட்ட எஸ்பியாக இருந்த முரளி ரம்பாவிற்கு சம்மன் அனுப்பப்பட்டு சமீபத்தில் சென்னையில் வைத்து சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் ஊட்டியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் சயான், தீபு, வாளையார் மனோஜ், சதீசன், ஜித்தின் ஜாய், சந்தோஷ்சாமி ஆகியோர் ஆஜராகினர். சிபிசிஐடி தரப்பில் கூடுதல் எஸ்பி முருகவேல், டிஎஸ்பிக்கள் சந்திரசேகர், அண்ணாதுரை ஆகியோர் ஆஜராகினர். சிபிசிஐடி தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர்கள் ஷாஜகான், கனகராஜ் ஆகியோர், தொலைத்தொடர்பு நிறுவனங்களிடமிருந்து தகவல் கேட்க வேண்டியுள்ளதால் கூடுதல் கால அவகாசம் வேண்டும் என சிபிசிஐடி தரப்பில் கோரப்பட்டது. இதனை ஏற்று வழக்கு விசாரணையை பிப்ரவரி 24-ம் தேதிக்கு மாவட்ட நீதிபதி முருகன் ஒத்திவைத்தார்.

Related Stories: