தேர்தல் வேலையை ஆரம்பித்து விட்டோம்; அதிமுக ரகசிய கூட்டம் பற்றி எங்களுக்கு கவலையில்லை: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

ஈரோடு: ‘தேர்தல் வேலையை நாங்கள் ஆரம்பித்து விட்டோம், அதிமுக ரகசிய கூட்டம் பற்றி எங்களுக்கு கவலையில்லை’’ என அமைச்சர் கே.என்.நேரு கூறினார். ஈரோட்டில் தி.மு.க.கூட்டணி கட்சியின் தேர்தல் பணி மனை திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது; திமுக கூட்டணி கட்சிகள் எந்த நிலையிலும் எந்த இடத்திலும் எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் விட்டு கொடுத்தது கிடையாது. கூட்டணி கட்சிகள் திமுகவின் முழு ஒத்துழைப்போடு பணியாற்றி வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கூட்டணி கட்சிகள் உறுதியளித்துள்ளனர்.

இதனால், இந்த தேர்தலில் திமுக வெற்றியடையும் என முழு நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. அதிமுக ரகசிய கூட்டம் ஈரோட்டில் நடந்துள்ளது. ஏனென்றால் அவர்களால் வெளிப்படையாக கூட்டம் போடும் அளவுக்கு முடியவில்லை. இருந்தாலும் வெளியில் வந்துதானே ஆக வேண்டும். கத்தரிக்காய் முற்றினால் சந்தைக்கு வந்துதானே ஆக வேண்டும். ரகசிய கூட்டம் போட்டுவிட்டு எங்களிடம் வரட்டுமே. நாங்கள் தேர்தல் வேலையை ஆரம்பித்து விட்டோம். எங்களுக்கு அதை பற்றி எதுவும் கவலையில்லை. இவ்வாறு கே.என்.நேரு கூறினார்.

Related Stories: