இஸ்ரேலின் தாக்குதலில் பெண் உள்ளிட்ட 9 பேர் உயிரிழப்பு: பாதுகாப்பு உறவை துண்டிப்பதாக பாலஸ்தீன தலைவர்கள் அறிவிப்பு

ஜெனின்: மேற்கு கரையில் இஸ்ரேல் நாட்டின் ராணுவம் மேற்கொண்ட திடீர் தாக்குதலில் 9 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். பாலஸ்தீன போராளிகளின் ஆதிக்கத்தில் உள்ள மேற்கு கரை ஜெனின் நகரத்தை முற்றுகையிட்டு இஸ்ரேல் படையினர் திடீரென துப்பாக்கி தாக்குதலை மேற்கொண்டனர். பாலஸ்தீன போராளிகளும் இஸ்ரேல் ராணுவத்தின் மீது பதில் தாக்குதல் நடத்தினர். சுமார் 3 மணி நேரம் நீடித்த இருதரப்பு மோதலில் 60 வயது மூதாட்டி உள்ளிட்ட 9 பேர் கொல்லப்பட்டதாகவும், 20 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் பாலஸ்தீன சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

இதையடுத்து இந்த ஆண்டில் இஸ்ரேலிய படைகளின் தாக்குதல்களில் உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 29-ஆக அதிகரித்துள்ளது. ராணுவ தாக்குதலில் அப்பாவி பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுவதை மறுத்துள்ள இஸ்ரேல் தீவிரவாதிகள் சிலரை மட்டுமே குறிவைத்து தாக்கியதாக தெரிவித்துள்ளது. ஒரே நாளில் 9 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதை அடுத்து பாலஸ்தீன தலைவர்கள் இஸ்ரேல் உடனான பாதுகாப்பு உறவுகளை துண்டிப்பதாக அறிவித்துள்ளனர். இருதரப்புக்கும் இடையே வன்முறைகள் தீவிரமடைவதை தடுப்பதற்கான சர்வதேச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Related Stories: